தில்லைக்காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.10.12 லட்சம் வசூல்
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் ஏழு மாதங்களுக்குப் பின் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களை இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கையாக 10 லட்சத்து 12 ஆயிரத்து 314 ரூபாய்; தங்கம் 62 கிராம்; வெள்ளி 130 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் மலேசியா ரிங்கட் 14, யு.எஸ். டாலர் 3, சிங்கப்பூர் டாலர் 1, சவூதி அரபியா தினார் 1, இலங்கை ரூபாய் 1 என பல ஆயிரம் ரூபாய் மதிப்பு கரன்சிகள் இருந்தன. கடந்த மே 21ம் தேதி திறந்த போது 8 லட்சத்து 71 ஆயிரத்து 109 ரூபாய்; தங்கம் 57.500 கிராம்; வெள்ளி 226 கிராம்; வெளிநாட்டு கரன்சிகள் 183 என இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வெங்கடேசன், வாசு, ராமலிங்கம், முத்துக்குமார் மற்றும் கோவில் சிப்பந்திகள் உடனிருந்தனர்.