உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வஞ்சுலீஸ்வரர் கோவில் பிரம்மதீர்த்த குளம்: புதுப்பொலிவுடன் சீரமைப்பு பணி

வஞ்சுலீஸ்வரர் கோவில் பிரம்மதீர்த்த குளம்: புதுப்பொலிவுடன் சீரமைப்பு பணி

கரூர்: கரூரில் மிகவும் பழமை வாய்ந்த, வஞ்சுலீஸ்வரர் கோவில் குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, புதுப்பொலிவுடன் சீரமைக்கும் பணி நடக்கிறது. கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பிரம்மகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், குளம் இருக்கும் இடம் தெரியாமல் போனது. திருத்தொண்டர்கள் சபை, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் குளத்தை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, கடந்த 2013 ஆக., 7ம் தேதி குளம் மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. செடி கொடி, குப்பைகளால் குளம் மறைக்கப்பட்டு இருந்தது. குளத்தை தூய்மைப்படுத்தி, புனித குளமாக மாற்ற, திருத்தொண்டர் சபை, அனைத்து சிவனடியார் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில், 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஈடுபட்டுள்ளனர். குளத்தில் இருந்த மண்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. தனியார் பங்களிப்புடன் குளத்தை சீரைமக்கும் பணி நடந்த சில நாட்களாக நடக்கிறது. குளத்தை சுற்றிலும் கிரானைட் கற்கள் பதித்து, குளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்படுகிறது. குளத்தில் தண்ணீர் நிரப்ப பைப் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட கற்கள், குளத்தை சுற்றிலும் பதிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !