உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர்: கரூர் மாவட்டம், கடவூரில் புதிதாக கட்டப்பட்ட மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடந்தது. கடவூர் தென்பகுதி மக்கள் மற்றும் உபயதாரர்களால், மதுரை வீரன் ஸ்வாமி கோவில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு வாரமாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவிரியில் இருந்து, புனித தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை, 9 மணிக்குள் கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ் பங்கேற்றார். விழாவை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !