ரிஷிவந்தியம் கோவிலில் மார்கழி பஜனை வழிபாடு
ADDED :3581 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பெருமாள் கோவிலில் மார்கழி மாத உற்சவம் துவங்கியது. மார்கழி மாத உற்சவத்தையொட்டி, ரிஷிவந்தியத்தில் நேற்று காலை பஜனை ஊர்வலம் நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் அதிகாலை நேரத்தில், முக்கிய வீதிகள் வழியாக பஜனை பாடல்களை பாடியவாறு கோவிலுக்கு சென்று, பக்தி பாடல்களை பாடினர். இதேபோல் திருவரங்கம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ரங்கநாதபெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு பஜனை ஊர்வலம் துவங்கியது.