வைகுண்ட ஏகாதசிக்காக 50,000 லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்!
ADDED :3585 days ago
தர்மபுரி: தர்மபுரியில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தர்மபுரி, கோட்டை பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த, 24 ஆண்டுகளாக, தர்மபுரி லட்டு பிரசாதம் வழங்கும் குழுவினர், பக்தர்களுக்கு இலவசமாக லட்டுகளை வழங்கி வருகின்றனர். 25ம் ஆண்டாக, வரும், 21ம் தேதி, காலை, 4.30 மணிக்கு நடக்கும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு பிரசாதமாக, வழங்க, நேற்று முன்தினம் இருந்து, 50 ஆயிரம் லட்டுகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்று இப்பணி
முடிக்கப்படும். விரதம் இருந்து, இப்பணியில் ஈடுபட்டு வருவதாக, லட்டு பிரசாதம் வழங்கும்
குழுவினர் தெரிவித்தனர்.