டிச.21ல் சொர்க்க வாசல் திறப்பு!
ADDED :3584 days ago
வடமதுரை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள்
கோயிலில் டிச.21ல் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு
திருமஞ்சனம், உஷகால பூஜை, 5 மணிக்கு ஆழ்வார் புறப்பாடு நடந்ததும், அதிகாலை 5.30
மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். தொடர்ந்து காலை 7 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி
புறப்பாடு நடக்கிறது. எரியோடு வரதராஜப் பெருமாள் கோயிலிலும் அன்று அதிகாலை 4.30
மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், அதிகாலை 5.45 மணிக்கு மேல் சொர்க்க வாசல் திறப்பும்
நடக்கிறது.