உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜ் கோவில் விநாயகர் தேர் 18 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து தேரோட்டம் நடைப்பெறுவது சிறப்பு. இந்த தேர்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையிலும் தேரோட்டம் நடந்து வந்தது. அதிகாரிகள் கண்டிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் தேர்கள் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது.  அதனைதொடர்ந்து விநாயகர் தேர் 18 லட்சம் மதிப்பில் தொழிலதிபர் காசி செட்டியார் அதேப்பொருள்களை கொண்டு தேர் புதுப்பித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை விநாயகர் திருத்தேருக்கு கீழ சன்னதியில் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து விநாயகர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. தேர் நான்கு வீதிகளை வலம் வந்து நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !