உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா

திருக்கோவிலூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மார்க்கெட் வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்த மண்டல பூஜை விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். திருக்கோவிலூர், மார்க்கெட் வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு, சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 6:00 மணிக்கு வாழைமட்டையால் அலங்கரிக்கப்பட்ட குடிலில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு, தென்பெண்ணை ஆற்றிலிருந்து தீர்த்த கலசம் கொண்டு வரப்பட்டு, கலசபூஜை நடந்தது. 10:40 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமம், சாஸ்தா ஹோமம், பூர்ணாகுதி, சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !