உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி: கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி: கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

ஆர்.கே.பேட்டை : வைகுண்ட ஏகாதசியையொட்டி, விஜயராகவ பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை முதல், நாளை காலை வரை, தொடர் பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி, பள்ளிப்பட்டு அடுத்த, விஜயராகவபுரம் விஜயராகவ பெருமாள் கோவிலில், தொடர் பஜனை மற்றும் பாலாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, சுப்ரபாத சேவை; 3:30 மணிக்கு திருமஞ்சனம்; 4:00 மணிக்கு சிறப்பு அலங்கார தரிசனம்; 4:30 மணி முதல், காலை, 10:00 மணி வரை, சொர்க்க வாசல் சேவை. மூலவர் பெருமாளுக்கு காலை, 9:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம்; பகல், 12:00 மணிக்கு கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.மேலும், பகல், 2:00 மணி முதல் நாளை காலை வரை, தொடர் பஜனை நடைபெறுகிறது. அதேபோல், ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில், மேல்பொதட்டூர் பூவராகசுவாமி கோவில், வங்கனுார் நாராயண பெருமாள் கோவில், எஸ்.வி.ஜி., புரம் சந்தான வேணுகோபால சுவாமி கோவில்களிலும், இன்று சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !