காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :3579 days ago
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, காலை 5.30 மணிக்கு அரங்கநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபத வாசலை கடந்து சென்றார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.