திரவுபதியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு கன்னி பூஜை
ADDED :3579 days ago
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு கன்னி பூஜை நடந்தது. இதையொட்டி காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள குளக்கரையிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக பேட்டை துள்ளிச் சென்றனர். பகல் 2:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு பஜனை, மாலை 4:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 4:30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதில், பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி அருள்பாலித்தார்.