ஐயப்பன் கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3577 days ago
சென்னிமலை: சென்னிமலை டவுன் ஐயப்பா நகரில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேகம் நடக்கும். இதன்படி, ஏழாம் ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் இருந்து, பால் குடங்களுடன் புறப்பட்டு சென்னிமலையின் நான்கு ராஜ வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பிறகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பா பக்த ஜனசபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.