திருப்பதியில் சோலார்: தேவஸ்தானம் முடிவு!
திருப்பதி: திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான கட்டடங்களுக்கு, ஆண்டுக்கு, 6 கோடி யூனிட் மின்சாரம் தேவை. தற்போது, 1 யூனிட் மின்சாரத்திற்கு தேவஸ்தானம், ஏழு ரூபாய் செலுத்துகிறது. இதை தவிர்க்க, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 10 மெகா வாட் திறனில், சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, சித்துார் மாவட்டம், கொசுவாரி பள்ளியில், 50 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. அங்கு, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்த, விக்ரம் சோலார் என்ற தனியார் நிறுவனம், சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, 1 யூனிட், 4.49 ரூபாய் விலையில், ஆண்டுக்கு, 1.55 கோடி யூனிட் மின்சாரத்தை, 20 ஆண்டு களுக்கு சப்ளை செய்ய உள்ளது. இதனால், தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு, 4 கோடி ரூபாய் மிச்சமாகும். ஏற்கனவே, திருமலையில், 8 மெகா வாட் திறன் உடைய, காற்றாலை மின் நிலையம் உள்ளது.