கரூர் மகாதானபுரத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி
ADDED :5212 days ago
கரூர்: லாலாப்பேட்டை அருகே மேட்டுமகாதானபுரத்தில் இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டுமகாதானபுரத்தில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஹாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு விழா நடந்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா ஆராதனையுடன் விழாவுடன் தொடங்கியது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று காலை பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.