இருக்கன்குடி கோயில் ஆடிவிழா கொடியேற்றுடன் இன்று துவக்கம்
ADDED :5212 days ago
சாத்தூர்:சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிபெருந்திருவிழா இன்று கொடியேற்றுடன் துவங்குகிறது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிபெருந்திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றுடன் துவங்குகிறது. இதை தொடர்ந்து மாலை நான்கு மணிக்கு கிராமமக்களால் கோயில் வாசலில் வேப்பிலை கொடியேற்றி மாரியம்மனை வழிபடுவர். விழா 12 ம் தேதி முடிய ஒன்பது நாள் நடக்கிறது.விழாவின் போது தினமும் அம்மன் பவனி ,சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 12 ம் தேதி அம்மன் வீதிஉலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவில், திருநெல்வேலி,தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.