உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ ஆழ்வார் திருமஞ்சனம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. 


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் நவ., 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய சடங்குகளின் ஒரு பகுதியாக ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள், நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த நறுமணக் கலவை பூசப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நவ., 17 முதல் 25ம் தேதி வரை அனைத்து அர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !