தென்கரை சாஸ்தா ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி படிபூஜை
ADDED :3649 days ago
தென்கரை: சோழவந்தான் தென்கரை சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் மார்கழி உற்சவத்தில் புஷ்பாஞ்சலி, யாகபடி பூஜை நடந்தது.கோயிலின் 18 படிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவாச்சாரியார் பரசுராமகண்ணன் தலைமையில் புனிதநீர் ஊற்ற படிபூஜை நடந்தது. சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.