குன்னூர் ஐயப்பன் கோவிலில் 49வது ஆண்டு மண்டல பூஜை
குன்னுார்: குன்னுார் ஐயப்பன் கோவிலில், 49வது ஆண்டு மண்டல பூஜை நடக்கிறது. குன்னுாரில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஐயப்ப பக்த சங்கம் சார்பில், நடப்பாண்டுக்கான, மண்டல பூஜை விழா, 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. 26ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார பூஜை, நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு உஷ பூஜை, காலை, 10:45 மணிக்கு உற்சவ கொடியேற்றுதல், காலை, 11:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, அன்னதான பூஜை, 12:15 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 27ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்துடன், கணபதி ஹோமம் நடக்கிறது. காலை,10:15 மணிக்கு துர்கையம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், அபிஷேக பொருட்களுடன் வாத்தியங்கள் முழங்க, ஐயப்பன் கோவிலுக்கு சரண கோஷ ஊர்வலத்துடன் சென்று, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்துகின்றனர். மாலை, 3:00 மணிக்கு மதுரை அங்கு ஸ்ருதி குழுவினரின் பக்தி இன்னிசை, மங்கள வாத்தியம் முழங்க தாலமேந்திய சிறுமியர், பாலக்கொம்புடன், உற்சவ மூர்த்தி, புலி வாகனத்தில் பவனி வருகிறார். ஜனவரி ஒன்றாம் தேதி மாலை, 6:40 மணிக்கு மகர ஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது.