உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி பவனி!

ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி பவனி!

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்காக  ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்கஅங்கி பவனி புறப்பட்டது.

சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜையின் இறுதி நாளில் நடப்பது மண்டல பூஜை. இந்நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனியாக எடுத்து வரப்படும். ஆரன்முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து சபரிமலை மாதிரி ரதத்தில் எடுத்து வரப்படும் தங்கஅங்கி பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேவசம் அதிகாரிகள் பாதுகாப்புடன் எடுத்து வரும் அங்கி, வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி பம்பை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !