உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: போலீஸ் பாதுகாப்பு

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: போலீஸ் பாதுகாப்பு

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்று உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயில். இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்படுவது வழக்கம். இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசிப்பார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச., 17ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாளை(டிச., 25) காலை 9 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களையும் நிகழ்ச்சி நடக்கிறது. 26 அதிகாலை 4 மணிக்கு அருணோ தயத்தில் நடராஜர் திருமேனி மீது மீண்டும் சந்தணம் பூசப்பட்டு சர்வ அலங்காரத்துடன் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை களுக்கு பின் சந்தனாதி தைலம் பூசப்படும். இரவு 10:30 மணியளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர். விழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !