காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம்!
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில் இராப் பத்து முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்கரத்தில் காட்சி அளித்தார். காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கடந்த 11ம் தேதி முதல் மார்கழி மாத பகல்பத்து இராப்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்வசத்தில் தினந்தோறும் நித்ய கல்யாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாரதனை நடக்கும். தினந்தோறும் மாலை பிரபந்த சேவையும், மாடவீதி சாமி புறப்பாடும் நடந்தது. பகல்பத்து உற்சவம் கடந்த 20ம் தேதி முடிந்தது.பகல்பத்து உற்சவத்தின் இறுதி நாளான அன்று பெருமாள் மோகன அவதாரத்தில் அருள்பாலித்தார். கடந்த 21ம் தேதி இராபத்து உற்சவம் துவங்கியது. முதல்நாளன நேற்று வைகுண்ட ஏகாதசி என்பதால், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை முடிந்து பரமபத வாசல் வழியாக அம்பாளுடன் நித்ய கல்யாண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இராப் பத்தை முன்னிட்டு பெருளாள் சிறப்பு அலங்கரத்தில் காட்சி அளித்தார்.இந்நிழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் நித்யகல்யாணசபை சிறப்பாக செய்திருந்தனர்.