உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோயிலில் திருக்கல்யாணம்

காளையார்கோயிலில் திருக்கல்யாணம்

காளையார் கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவல்லி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சொர்ணவல்லி அம்மனுக்கு ஜூலை 24 ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று யாகபூஜை, வேதமந்திரங்கள், வேதபாராயணம் முழங்க 1 மணிக்கு சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீர் உற்சவ விழாவுடன் நிறைவு பெற உள்ளது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காளீஸ்வர குருக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !