விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை!
ADDED :3909 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி, மணிமுக்தாற்றிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று காலை புனித நீர், சக்திகரகம் எடுத்து கடை வீதி, அய்யனார் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக வந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலை அடைந்தனர். பின்னர், கோவிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, கருப்பண்ண சுவாமிகளுக்கு ஐயப்ப பக்தர்கள் லட்சார்ச்சனை செய்தனர். அதில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.