திருப்புத்தூர் அய்யனார் கோயிலில் மழைவேண்டி யாகம்
ADDED :3714 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பெரியகண்மாய் கரையில் அமைந் துள்ள குளம்கரை கூத்த அய்யனார் கோயிலில் இன்று மழை வேண்டி யாகம் நடைபெறுகிறது.திருப்புத்தூர் பகுதியில் போதிய மழை இல்லாத தாலும், பாலாறு, விருசுழியாறு,மணிமுத்தாறு ஆகிய வற்றில் நீர் வரத்து இல்லாததாலும் கண்மாய்கள் பெருகவில்லை. விவசாயமும் செழிக்கவில்லை. இதனால் திருப்புத்தூர் மற்றும் ஆறுகள் உற்பத்தி யாகும் தலங்களிலும் மழை பெய்ய வேண்டி நீர் நிலைகளைக் காக்கும் கடவுளான அய்யானார் கோயிலில் இன்று காலை சிறப்பு யாகம் துவங்குகிறது. காலை 6 மணிக்கு துவங்கி நான்கு மணி நேரம் யாகம் நடைபெறும். அய்யனார் கோயில் கும்பாபிஷே கத்திற்கு பின்னர் பவுர்ணமி தோறும் சாஸ்தா பவுர்ணமி குழுவினரால் சிறப்பு பூஜை நடக்கிறது.