உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போளிவாக்கத்தில் 27ல் காயத்ரி மகா யாகம்

போளிவாக்கத்தில் 27ல் காயத்ரி மகா யாகம்

போளிவாக்கம்:மணவாள நகர் அடுத்த, போளிவாக்கத்தில், வரும் 27ம் தேதி, காயத்ரி மகா யாகம் நடைபெற உள்ளது.போளிவாக்கம் சத்திரத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மைதானத்தில், வரும் 27ம் தேதி, ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு, காயத்ரி மகா யாகம் நடைபெற உள்ளது. அன்று காலை 10.00 மணிக்கு துவங்கும் காயத்ரி மகா யாகம், 12:30 மணிக்கு நிறைவு பெறும். அதேபோல், பிரதி வியாழக்கிழமை தோறும் திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் கன்னைய நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், காலை 11:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை காயத்ரி மகா யாகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !