புதூர் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை!
ADDED :3940 days ago
புதூர்: புதூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா டிச., 23ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. தினமும் காலையில் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலையில் அபிஷேகம், ஆராதனையும், மாலையில் சாஸ்தா விளக்கு பூஜையும் நடந்தது. கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் தலைமையில் உதவி ஆணையர் இளையராஜா, தக்கார் ஜெயராமன் மற்றும் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.