உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலி மண்டல பூஜை விழா; திரண்ட பக்தர்கள்!

பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலி மண்டல பூஜை விழா; திரண்ட பக்தர்கள்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள்  நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோவிலில்  மண்டல பூஜை விழாவையொட்டி,  காலை 4:00  மணிக்கு திருமதுர பூஜை, 4:15 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு அபிேஷகம், 6:00 மணிக்கு மஞ்சள்  அம்மனுக்கு பூஜையும் நடந்தது.  காலை, 10:30 மணிக்கு மண்டல பூஜை, மஞ்சள் அம்மனுக்கு தீபாராதனை, 11:15 மணிக்கு ஐயப்ப  சுவாமிக்கு தீபாராதனை, 11:30 மணி மகேஸ்வர பூஜை, 11:45 மணி அன்னதானம் உள்ளிட்ட பூஜைகளும் இடம்பெற்றன.  ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின், மாலை, 6:00 மணிக்கு மண்டல பூஜை, 6:30 மணிக்கு பஞ்ச வாத்தியத்துடன் புஷ்ப அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி, கோவை ரோடு,  உடுமலை ரோடு, தேர்நிலை வழி, மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, பஸ்ஸ்டாண்ட் வழியாக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தன.  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  

கலை நிகழ்ச்சிகள்: ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பா சேவா  அணி சார்பில், ஐயப்ப தரிசன நாடகம், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின், மாலை 6:30  மணிக்கு வாணவேடிக்கையுடன் திருவீதி உலா  செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

108 சங்காபிேஷகம்: மடத்துக்குளம், கணியூர் ஐயப்ப சுவாமி கோவிலில், 108 சங்காபிேஷகம் இன்று நடக்கிறது. மடத்துக்குளம்,  ஜோத்தம்பட்டி, கணியூர் அருகே அரியநாச்சிபாளையம், ஜோதி நகரில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், நடந்து வரும் கும்பாபிேஷக  மூன்றாமாண்டு விழா மற்றும் மண்டல பூஜை விழா, ஒரு லட்சத்து எட்டு லட்சார்ச்சனை விழாவில், இன்று, 108 சங்காபிேஷக  நடக்கிறது. நேற்றுமுன்தினம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. காலை, 7:30 முதல்  லட்சார்ச்சனை ஆரம்பமானது. மாலையில், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை, 7:30  மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. பிற்பகல், 3:00 மணிக்கு, அமராவதி ஆற்றில் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. மாலை, 5:00  மணிக்கு, ஆற்றில் இருந்து, குதிரை வாகனத்தில், சுவாமி  ஊர்வலமாக, கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

விழா நிறைவு நாளான இன்று காலை, 8:45 மணிக்கு, ஒரு லட்சத்து எட்டு அர்ச்சனை நிறைவடைகிறது. காலை, 9:00 மணிக்கு, 108  சங்காபிேஷகம் நடக்கிறது; 10:30 மணிக்கு, 21 வகை மூலிகை திரவியங்களில் மூலவரான ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகமும், 11:30  மணிக்கு, சுவாமி ராஜ அலங்காரத்தில், வில் அம்புடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மதியம், 12:00 மணிக்கு, மகா தீபாராதனையும், 12:30 மணிக்கு, ஐயப்ப பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !