உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை விழா

ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை விழா

உடுமலை: உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமிக்கு, மண்டல பூஜை நேற்று நடந்தது. உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐயப்ப சுவாமி மண்டல பூஜை, நவ., 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. மண்டல பூஜை பெருவிழா, நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. காலை, 6:30 மணிக்கு, அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களின் சரணகோஷம், பக்திப்பாடல்கள், பஜனைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையும், 10:00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடந்தது.

ஆருத்ரா தரிசனம்: மடத்துக்குளம் n மடத்துக்குளம் கொழுமம் தாண்டேசுவரர் கோவிலில் நடந்த ஆருத்ராதரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே கொழுமத்தில் தாண்டேசுவரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடந்தது.தாண்டேசுவரசாமிக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணமும், தொடர்ந்து திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !