புத்தாண்டு நாளில் மண்டல பூஜை
ADDED :3578 days ago
குன்னுார்: குன்னுார் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லிக்கொரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரமாசி கெத்தையம்மன் கோவிலில், கடந்த நவம்பர்,15ல், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் மண்டல பூஜை நடத்தப்பட்டு, அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்து வருகிறது. புத்தாண்டு தினத்தில் மண்டல நிறைவு பூஜைகள் நடக்கிறது. இதில், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் ஆகியவை நடக்கிறது.