உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் ஜெயந்தி விழா

வள்ளலார் ஜெயந்தி விழா

தாராபுரம்: வடலூர் வள்ளலார், 193வது ஜெயந்தி விழா மற்றும் கொளத்துப்பாளையம் வள்ளலார் அருள்ஜோதி சங்கத்தின், 16வது ஆண்டு விழா, தாராபுரம் பார்க் ரோடு, ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்தது. வைத்தியலிங்க ஜீவ சமாதியின் குருக்கள் காளிதாஸ் சுவாமிகள் தலைமை வகித்தார். "கோவில்களில், சாமி தரிசனத்துக்கு கட்டணம் வாங்குவதை ரத்து செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வள்ளலார் ஜெயந்தி விழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சுவாமி தமிழ்ப்பித்த ஆதீனம், ஒட்டன்சத்திரம் சன்மார்க்க சங்க தலைவர் சென்னி சண்முகம், பொள்ளாச்சி சன்மார்க்க சங்க தலைவர் சிந்தைக்கினியன், திருப்பூர் மாவட்ட சன்மார்க்க சங்க துணை தலைவர் புருஷோத்தமன், பாவலர் வேலுச்சாமி, வடலூர் கருணை இல்ல தலைவர் அருகம்புல் சுப்ரமணியம், அகில உலக நல்வாழ்வு ஜனகல்யாண் பொது செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !