108 திருவிளக்கு பூஜை
ADDED :3577 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம் சத்யஜோதி ஐயப்ப பக்தர்கள் சார்பில், திருவிளக்குகளுடன் அலங்கார திருவீதி உலா மற்றும், 108 திருவிளக்கு பூஜை ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி ஐயப்ப ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சுவாமி ஊர்வலம் சின்னப்பநாயக்கன்பாளையம், ஐயப்பன் கோவில் வளாகத்தில் இருந்து காவேரி நகர், ராஜராஜன் நகர், பெராந்தர் காடு உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து நடந்த, 108 திருவிளக்கு பூஜையில், பெண்கள் பங்கேற்று மந்திரங்கள் ஓதியவாறு ஐயப்பனை வழிபட்டனர்.