கனமழையால் இடிதாங்கி சேதம்: கோவில் நிர்வாகம் மெத்தனம்!
ADDED :3673 days ago
திருவொற்றியூர்: கனமழையால் சேதமடைந்த, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் இடிதாங்கியை சீரமைக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக, பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாங்கி பொருத்தப்பட்டு உள்ளது. சமீப கனமழையால், இடிதாங்கி சேதமடைந்தது. அதனை சரி செய்யாமல், கோவில் நிர்வாகம் மெத்தனமாக இருப்பது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த இடிதாங்கியை விரைவில் சரி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.