விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா: கொடி மரங்கள் நடப்பட்டன!
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, ஆறு புதிய கொடி மரங்கள் நடப்பட்டன. விரு த்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கண்டராதித்த சோழன் உள்ளிட்ட மன்னர்கள், நாயக்கர்களால் திருப்பணிகள் செய்த சிறப்புடையது. இந்த கோவிலில் நடக்கும் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழு புதிய கொடி மரங்கள் செய்யப்பட்டன. அதில், ஆறு கொடி மரங்கள் நேற்று நடப்பட்டன. அதன்படி, 50 அடி உய ரத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதான கொடிமரம் சிறப்பு பூஜைகளுடன் நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் நடப்பட்டன. தொடர்ந்து, ஆழத்து விநாயகர் சன்னதியில் ஒரு கொடி மரம், விருத்தகிரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் மூன்று கொடி மரங்கள், விருத்தாம்பிகை சன்னதியில் ஒரு கொடி மரம் நடப்பட்டன. அதில், திருப்பணிக் குழுவினர், பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.