உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு தியாகராஜரின் 169வது ஆண்டு ஆராதனை விழா ஜன.,24ல் தொடக்கம்!

திருவையாறு தியாகராஜரின் 169வது ஆண்டு ஆராதனை விழா ஜன.,24ல் தொடக்கம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜரின் 169வது ஆண்டு ஆராதனை விழா வரும் ஜன.,24ம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, இன்று அதிகாலை தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபறெ்று அதை தொடர்ந்து, பல்வகையான பூக்கள் கொண்டு தியாகராஜர் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

அதனை தொடர்ந்து, விழாவின் தொடக்கமாக கோயில் வளாகத்தில், சபையின் தலைவர் மூப்பனார்,அறங்காவலர்கள் சுரேஷ்மூப்பனார், மற்றும் நிர்வாகக்குழு கமிட்டி உறுபினார்கள் ஆகியோர் முன்னிலையில், பந்தகால் நடும் விழா பூஜைகள் செய்யப்பட்டு நடப்பட்டன. அதைதொடர்ந்து,வரும் ஜன.,24ம் தேதி மாலை 4.15 மணிக்கு சென்னை கிருஷணகான சபையின் தலைவர் நல்லிகுப்புசாமி அவர்கள் கலந்துக்கொண்டு இசைவிழாவை துவக்கி வைக்கிறார்கள்.  விழா மாலை இரவு 7 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 25ம் தேதி மற்றும் 26ம் தேதி காலை 9.00 மணிமுதல், இரவு 11 மணி வரை தொடர் இசைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

27ம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை தியாக பிர்ம்ம மஹோத்ஸவ சபையின் சஹஸ்ர நாம அர்ச்சனை,இரவு 11 மணிக்கு மேல் திவ்ய நாமம், 28 ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தியாகராஜர்ஸ்வாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீதமாக நாடுமுழுவதும் இருந்து வரும் கர்னாடக வித்வான்கள் ஆராதனை பஞ்சரத்ன கீர்த்தனைகள் மஹாபிஷேகம் நடைபெறும்.அன்று இரவு 7.30 மணிக்கு நிகழ்ச்சியின் நிறைவாக மல்லாரியுடன் ஸத்குரு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !