உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் விளக்கு பூஜை உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி

ஐயப்பன் விளக்கு பூஜை உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி

மஞ்சூர்: மஞ்சூரில் ஐயப்பன் விளக்கு பூஜை இன்று நடக்கிறது. காலை, 6:15 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது. பகல், 3:00 மணியிலிருந்து, 6:00 மணி வரை, ஐயப்பன் கோவிலில் இருந்து, குந்தா சிவன் கோவில் வரை, பாலகொம்பு எடுத்து மேளங்கள் முழங்க, விளக்கு ஊர்வலம் நடக்கிறது.நள்ளிரவு,1:00 மணியிலிருந்து அதிகாலை,4:00 மணிவரை, பாலக்காடு தேங்குரிசி ஹரிதாஸ் சுவாமிகள் தலைமையில் உடுக்கையடி பாடல் ஐயப்பன் வரலாறு நடக்கிறது. தொடர்ந்து, குண்டம் இறங்குதல், திரி உழிச்சல், வாவர் துள்ளல் விளையாட்டு நடக்கிறது. புத்தாண்டு தினத்தில், 6:00 மணிக்கு, மறுபூஜை ஆராதனை, மங்கள் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !