ஆங்கில புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு!
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ்
உள்ள கோவில்களில், நாளை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.
சென்னையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில்,
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், மதுரை
மீனாட்சி அம்மன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உட்பட,
தமிழகம் முழுவதும், பல கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்க
உள்ளன.சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில், அதிகாலை,
3:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனத்துடன் வழிபாடு துவங்குகிறது. காலை,
6:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வடபழனி
முருகன் கோவிலில், காலை, 4:00 மணி முதல், தரிசனம் துவங்குகிறது. அதிகாலை
முதல், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர் என்பதால், கோவில்களில்
பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு உள்ளது.