உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த முடிவு

ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன., 10 முதல் யாகசாலை பந்தல் உள்பட கோயில் பிரகாரம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜன., 20ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நான்கு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன் உள்ளிட்ட 22 சன்னதிகளின் விமானங்கள் மராமத்துக்கு பின் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் உள்ளது. தற்போது கோபுரம், விமானங்கள், மேல்தளத்தில் பக்தர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலி, மரதடியில் ஏணி அமைக்கும் பணி நடக்கிறது.

இந்நிலையில் கும்பாபிஷேகம் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக நான்கு ரதவீதிகள், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்துவது, கோயில் மேல் தளத்தில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என 4 ஆயிரம் பேர் உட்கார்ந்து தரிசிப்பதற்கான வசதி ஏற்படுத்துதல், தனி பாதைகள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது. ஜன., 15 ம் தேதி கணபதி ஹோமம், மறுநாள் யாக சால பூஜை துவங்குகிறது. இதையடுத்து கோயில் நந்தவனத்தில் அமைந்துள்ள பிரமாண்ட யாகசாலை பந்தல் மற்றும் கோயில் பிரகாரங்கள் ஜன., 10 முதல் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதெனவும் முடிவானது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி, அதிகாரிகள் ராஜாங்கம், கக்காரின், அண்ணாதுரை, கமலநாதன், செல்லம், மீன்துறை கோபிநாத், நகராட்சி வரதராஜன், மின்வாரியம் பால்சாமி, சுங்கத்துறை, தீயணைப்புதுறை, மாநில நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள் பங்க÷ற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !