உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ராஜபாளையம்: புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையம் கோயில்களில் சிறப்பு பூ அலங்கார வேலைகள் நேற்று துவங்கின. முப்பிடாரி அம்மன் கோயில் மாலையில் சுவாமி, அம்மன் , பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தன. இரவில் பஜனை, சொற்பொழிவு நடந்தன. புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !