மேல்மலையனூர் கோவிலில் ரூ.22 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :3698 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவி லில், -22 லட்சம் ரூபாய், உண்டியல் காணிக்கையாக வசூலானது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்றுமுன்தினம் நடந்தது. இப்பணியை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதில், 22 லட்சத்து 35 ஆயிரத்து 442 ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்க நகை, 214 கிராம் வெள்ளி நகை ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் அறங்காவலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.