விருத்தாசலம் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம்
ADDED :3777 days ago
விருத்தாசலம்: வைகுண்ட ஏகாதசியொட்டி, விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. தினசரி திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி 1–2 பத்துக்கள், சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வைகுண்ட ஏகாதசியொட்டி, கடந்த 22ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கடந்த 3௦ம் தேதி மாலை 5:00 மணியளவில், பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், நம்மாழ்வார் திருமஞ்சனம், ஆழ்வார் மோட்சம், கோஷ்டி தீர்த்தம் பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.