உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக பணி துவக்கம் 300 சிவனடியார்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக பணி துவக்கம் 300 சிவனடியார்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணி
துவங்கியதை யொட்டி 300 சிவனடியார்கள் காப்பு கட்டி பூஜை நடத்தினர். திண்டுக்கல்
அபிராமியம்மன் கோயில் அதிக பொருட் செலவில் நிறைந்த வேலைப்பாடுகளுடன்
கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகப் பணிகள் ஜன., 20ல் நடக்க உள்ளது. இதற்காக திண்டுக்கல் மாவட்ட சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், 21 மண்டல நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்து காப்பு கட்டும் நிகழ்வு நேற்று நடந்தது. பூஜையில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300 சிவனடியார்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், "சிறப்பு பூஜைக்குப்பின், மூலவர் சந்நிதியில் வைத்த காப்புக்கள் சிவனடியார்கள் கைகளில் கட்டப்பட்டன. இன்று முதல் 21 மண்டல நாட்கள் விரதம் அனுசரித்து கும்பாபிஷேகத்தில்
பங்கேற்க உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !