மணக்காட்டூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED :3724 days ago
செந்துறை: செந்துறை அருகே மணக்காட்டூரில் தர்மசாஸ்தா கோயில் நான்காம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் மாலை முருகன், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கன்னி ஐயப்ப பக்தர்களின் பாதபூஜை நடந்தது. அதை தொடர்ந்து மானாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம் முழங்க முக்கிய வீதிகளில் தேர்பவனி நடந்தது. நேற்று காலை மணக்காட்டூர், மேற்கிபட்டி, தொண்டபுரி, அடைக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கரந்தமலை பாலாற்றில் புனித நீராடினர். தொடர்ந்து தர்மசாஸ்தா கோயில் முன் அமைந்திருந்த குண்டத்தில் பூக்குழி இறங்கினர். இதையடுத்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு தயாராகினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமத்தினர் கலந்து கொண்டனர்.