உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் ஆழ்வார் சபை மாநாடு!

செஞ்சியில் ஆழ்வார் சபை மாநாடு!

செஞ்சி: மதுரகவி ஆழ்வார் சபை மாத மாநாடு செஞ்சியில் நடந்தது. செஞ்சி தாலுகா மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன வைணவ மாத மாநாடு, செஞ்சி ஏ.என்.ஏ., மினி ஹாலில் நடந்தது. சபை துணை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். ராஜேந்திரன் திருமால் துதி பாடினார். கண்ணன் வரவேற்றார். கண்ணன் செய்த புண்ணிய லீலைகள் என்ற தலைப்பில் சோழந்தாங்கல்ஜெயகாந்தன் பாகவதரும், திருப்பல்லாண்டு பொருமை குறித்து  வளையசெட்டி குளம் ரகுபதியும் சிறப்புரையாற்றினார். உபயதாரர்கள் சின்னத்தம்பி, சின்னபாப்பா மற்றும் செஞ்சி தாலுகாவை சேர்ந்த வைணவ அடியார்கள், பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டிகள் கலந்து கொண்டனர். ஜெயராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !