கன்னிகாபரமேஸ்வரி அம்மனின் நிஜபாத யாத்திரை!
ADDED :3773 days ago
சின்னசேலம்: சின்னசேலத்தில், கன்னிகாபரமேஸ்வரி அம்மனின் நிஜபாதரத யாத்திரை நடந்தது. சின்னசேலம் ஆர்ய வைஸ்ய சமூகம் சார்பில், கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆந்திரா மாநிலம் பெனுகொண்டாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் நிஜபாத ரத யாத்திரை நேற்று காலை நடந்தது. நகரின் தேரோடும் வீதி வழியாக வளம் வந்து சன்னதியை அடைந்தது. கும்ப மரியாதையுடன் சமூக மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாத யாத்திரை குழுவினர் நாகராஜ், ரமேஷ் சுவாமியின் வரலாறு பற்றியும், சேத்திரத்திற்கு பல விதமான திட்டங்கள் குறித்தும் பேசினார். அதன் பின் புண்ணியதானம், பால அபிஷேகம், தம்பதி பூஜையும் நடந்தது.