பூசாரிகள் மட்டுமே இறங்கும் குண்டம் திருவிழா: தாளவாடியில் கோலாகலம்
ADDED :3769 days ago
தாளவாடி: தாளவாடி அருகே ஓசூரில் உள்ள மாதேஸ்வரசுவாமி கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை, அம்மன் அழைப்பு, சுவாமி திருவீதி உலா, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை, 7.30 மணி அளவில், 60 அடி நீளம், ஐந்து அடி அகலத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பூசாரிகள் பசுவண்ணா நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாதவன் ஆகியோர் இறங்கினர். இங்கு, பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவது குறிப்பிடத்தக்கது. தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.