சுருளிமலை-பழநி: பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
ADDED :3641 days ago
கூடலூர், :கூடலூரில் சுருளிமலை-பழநி மலை பாதயாத்திரை குழுவின் 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். முன்னதாக, சுருளி மலையில் தீர்த்தம் எடுத்து வந்தனர். குருசாமிகள் முருகேசன், இந்துபானு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர், வீரபாண்டி, பெரியகுளம், வத்தலக்குண்டு, சத்திரபட்டி வழியாக பழநிக்கு ஜன.11 சென்றடைகின்றனர்.