உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரகுருதாச சுவாமிகள் ஓர் அவதார புருஷன்

குமரகுருதாச சுவாமிகள் ஓர் அவதார புருஷன்

கோவை:முருகன் - சிவன் வேறுவேறு அல்ல என்ற குமரகுருதாச சுவாமிகள் ஓர் அவதார புருஷன், என, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் முனைவர் சிவக்குமார் நேற்று பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ எனும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. ஐந்தாவது நாளான நேற்று ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் எனும் தலைப்பில் முனைவர் சிவக்குமார் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அவதாரம் செய்த திருத்தலம் ராமேஸ்வரம். உலகில் பிறப்பு, அவதாரம், தோற்றம் என மூன்றுவித தொடர்பு உண்டு. முருகன் - சிவன் வேறுவேறு அல்ல; இருவரும் ஒன்றே. சிவனிடமிருந்து முருகன் வரவில்லை; சிவனேதான் முருகன், என்கிறார் குமரகுருதாச சுவாமிகள்.

சிவனுக்கு உருவம் இயற்கை. விஞ்ஞானம் பார்த்து பயப்படாத ஒரே சமயம் சைவ சமயம். கோவில்கள், கடவுள் உருவம் உள்ளிட்டவற்றை விஞ்ஞானம் ரீதியாக சைவ சமயத்தினர் அமைத்துள்ளனர். இருளில் உள்ள நமக்கு அருள்பாளிக்கவே சிவன் இறங்கி வருகிறான். அவதார புருஷனாக இருக்கும் குமரகுருதாச சுவாமிகள் பரபிரம்மமாக இருப்பது முருகப்பெருமான்தான்; அவனே முழுமுதற்பொருள் என்கிறார். எவ்வளவு பூஜை செய்கிறோமோ அது கூடவே வரும். சிவன் நமக்கு பூஜை செய்யவே தந்த உடம்பு இது. எனவே, அனைவரும் பூஜை செய்து அருள்பெற வேண்டும்.இவ்வாறு, முனைவர் சிவக்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !