உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர்கள் முதுகில் ஒளிரும் ஸ்டிக்கர்!

பழநி பக்தர்கள் முதுகில் ஒளிரும் ஸ்டிக்கர்!

திண்டுக்கல்:பழநி கோயில் தைப்பூச திருவிழா வரும் 18ல் துவங்குகிறது. பகலில் வெயில் இருப்பதால் பாத யாத்திரை பக்தர்கள் இரவு நேரத்தில் நடையை துவக்குகின்றனர். பக்தர்கள் நடந்து செல்ல ரோட்டோரம் உள்ள பேவர் பிளாக் கற்கள் பதித்த பாதை நடப்பதற்கு உகந்ததாக இல்லை. இதனால் ரோட்டில் நடந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.எனவே பக்தர்களின் முதுகுப்பகுதி ஆடையில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா கலெக்டர் ஹரிஹரனிடம் வலியுறுத்தியுள்ளார். இதை பின்பற்ற எஸ்.பி.,க்கு கலெக்டரும் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !