மார்கழி தமிழிசை திருவிழா
ADDED :3638 days ago
மதுரை: மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில் மார்கழி தமிழிசை திருவிழா நடந்தது.ஞானசம்பந்தர் முதல் மாரியப்ப சுவாமிகள் வரை தமிழிசை வளர்த்த பெரியோர்கள் இயற்றிய இசைப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் முனைவர் சுரேஷ் சிவன் குழுவினர், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப் பாடல்களை பாடினர். இரண்டாம் நாளில், முத்துவிநாயகம் திருவாசகப் பாடல்களையும், அவந்தராஜ் மதுரை மாரியப்ப சாமிகளின் இசைப் பாடல்களையும் பாடினர். மூன்றாம் நாளில், முனைவர் முருகன், சோமு, கண்ணன், ரங்கநாயகி, தியாகராஜன் பாடினர்.