பிரளயநாதர் சுவாமி கோயிலில் ராகு கேதுபெயர்ச்சி யாகம்
ADDED :3620 days ago
சோழவந்தான் :சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோயிலில் ராகு கேது பெயர்ச்சியையொட்டி நாளை மாலை 5.00 மணிக்கு மகா யாகம் நடக்கிறது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜை மற்றும் அர்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, எம்.வி.எம்., குழுமத் தலைவர் மணி முத்தையா உட்பட பலர் செய்துள்ளனர்.